நதியும்  நிலவும்

நதியோடு 
நகர்ந்து செல்கிறது நிலா !
சிலநாள்  துண்டாக ....
சிலநாள் பந்தாக ...
நீர்
கொள்ளவுமில்லை ....
தள்ளவுமில்லை ...
நிலவைக்கொண்டாடினோம் ...
நிலவோடே 
வாழ்ந்தோம் ...
நிலாச்சுவை மறந்த உலகில் 
ஓடிவா பாட ஒருவருமில்லை ......
சப்பி எறிந்த மாங்கொட்டை போல் 
நிலா மேகப்புழுதியில் ......     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்