கண்ணாமூச்சி

துணியோ...
கதவோ...
திரைச்சிலையோ...
எதுவும் இல்லாவிடில்...
ஒற்றைக்கையோ...
பாவனையோ...
மறைத்து..
அம்மா காணோமே...
பாப்பா காணோமே...
வாய் கொள்ளா...
சிரிப்போடு...
தோ இருக்கே...
வாரித் தழுவும்
குழந்தையிடம்
எப்படிச் சொல்வது
இதுதான் வாழ்க்கை என்று...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்