மெய் பிரியும் தருணம்..

சொற்கள் சாதுவாக
சுற்றியபோது
எழுத்துக்கள்
அச்சடித்ததுபோல்
அழுத்தமாக இருந்தன...
ஆக்ரோஷத்தின்
அழுத்தம் ஏறியபோது
மெய்யைக் கீழே தள்ளிவிட்டு
உயிரின் நீட்சிகள்
கொம்பாக காலாக
வளைந்து கிடந்ததிலிருந்து
நிமிர்ந்து 
பிணைந்து 
இறுகி இறுகிக் 
கயிறாக இறுக்கின

எதிர்ப்பட்ட 
அன்பு ஆசை காதல் 
காமத்தின் கழுத்தும் 
தப்பவில்லை...  

கருத்துகள்

மாதவராஜ் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாதவராஜ் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை