மழை  தின்ற வெளிச்சம் ....


ஒருகாலத்தில் 
எடுத்திருந்த 
நேர்வகிடு போல் 
நெளிந்த  சாலைக்குள் 
எலுமிச்சை வெளிச்சம் 
பிளந்து பிளந்து 
உள்ளோடுகிறது....

வெளிச்சம் சொட்டாவிடினும் 
கம்பங்களையும் 
கண்டுகொள்ளத்தான் வேண்டும் 
குறைந்தபட்சம் 
காயம் தவிர்க்க...

இருளின் நிழலும் 
இருளாகக் கவிய...
வழியும் தூறல் 
நீர் ஒளியும் சிதறாது 
நாவால் உதடு மீட்டி 
ருசித்து வழிப்பதாக 
வெளிச்ச ரேகையையும் 
செரித்து சிரித்தது .... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்