எதிர்பாரா சந்திப்பு...

காற்றில் உலரும்
காலை மலரும்
காலத்தில் வெளுக்கும்
காகித மலரும்
நலம் விசாரித்துக்கொள்ள
மேடை கிடைத்தது ...
பூ ஜாடிககுப் பக்கத்தில் 
கழுத்து மாலையை 
கழற்றி வைத்தவரை 
ஓரக்கண்ணால்  பார்த்தவாறே 
காலைமலர் கண்ணீர்  வடித்தது...

பறித்து அடைத்த
பைக்குள் அடங்கி
இறுக்கித் தொடுத்த
விரலில்  நசுங்கி
கண்டவன் கழுத்தேறி
வீழபபோகிறேன் சாலையோரம்...
ஒய்யாரம்தான் உன் வாழ்வு...!

உன் தொல்லை ஒருநாளில் முடியும்!
நாளொருமேடையும்
தெறிக்கும் எச்சிலும்...
வியர்வை வீச்சமும்..
சாயம் வெளுக்கும்வரை அல்லவா 
என் சங்கடம்.. 
காகிதமலர் 
கண்ணைக் கசக்கியது..

விழா இனிதே முடிந்தது!   

கருத்துகள்

கலையரசி இவ்வாறு கூறியுள்ளார்…
காலை & காகித மலர்களின் சந்திப்பு நன்றாய் இருந்தது. சிறு வய்தில் படித்த வீட்டு எலியும் வயல் எலியும் என்ற கதையை நினைவுப்படுத்தியது. அவரவர்க்கு அவரவர் கஷ்டம்!
அக்கரை பச்சை என்று தலைப்பிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாயிருக்குமோ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை