என்றோ மறைந்த முகம்

என்றோ மறைந்த முகம்

யாரோ வழிப்போக்கர்
திண்ணையில்
தவறவிட்ட
மஞ்சள்நிற கம்பளி
தன அலமாரித்தட்டில்
வைக்க ஒப்பாத
பள்ளி நண்பன்
சுப்ரமணியை பார்த்தேன்
கையூட்டுக் கைதுக்காக
முகம் மறைக்க முயன்ற
பத்திரிகைப் படத்தில்...

கருத்துகள்

ராம்கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
காலத்தின் கோலமா, இல்லை இந்த சமூகத்தின் அவலமா?
Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
அன்றாடம் பார்க்கும் நிகழ்வுதான்
ஆயினும் தங்கள் வித்தியாசமான பார்வையில்
அழகிய படைப்பாகியுள்ளது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
nandri ramgopal.neengal ketta irandume uruththum vishayangalthaan
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
thangal varugaikkum pathivukkum nandri ramani sir
கலையரசி இவ்வாறு கூறியுள்ளார்…
நேர்மையாளனாக வாழ முடியாமல் கையூட்டுப் பெறுபவனாக அவனை மாற்றியது யார்? அவனது குடும்பமா, இல்லை இந்தச் சமூகமா?
கால ஓட்டத்தில் ஒரிஜினல் முகம் தொலைத்த அந்தப் பள்ளி நண்பனுக்கு என் ஆழ்ந்த அனுதாபம்!
நல்லதொரு கருத்து தொனிக்கும் கவிதை! பாராட்டுக்கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்