ஞாயிறு, டிசம்பர் 25, 2011

உணர்வின் உணவு

வேண்டித்தான் இருக்கிறது
உள்ள்முக மோனத்தில்
உறைந்த
புத்தனுக்கும் 
நீ
புத்தன்தான்
நீ புத்தன்தான்
நான் உணர்ந்தேன்
என்றொரு
ஒப்புகைக்குரல்.....

5 கருத்துகள்:

venu's pathivukal சொன்னது…

முற்றிலும் வேறான குரல், இதே மாதிரியான
கண்ணோட்டக் கவிதைகள் இதற்கு முன்பும் புத்தன் மீது
வைக்கப்பட்டிருக்கின்றன என்றாலும்..
இந்த முரண்பாடு தான் புத்தனையும் வசீகரமாக்கியது.
மற்ற மத பீடங்களைக் கொலைகாரர்கள் ஆக்கியது.

எஸ் வி வேணுகோபாலன்

உமா மோகன் சொன்னது…

நேரடியாக புத்தன் என்றாலும் மறைமுகமாக நாம் தான் என தோன்றுகிறது

Yaathoramani.blogspot.com சொன்னது…

அடையாளப் படுத்த ஏதும் இல்லையெனில்
அடைந்தோம் என்பதை எப்படி உணர்வது ?
அவன் புத்தனாயினும்
கோடிவீட்டுக் குப்பனாயினும்...
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

ramgopal சொன்னது…

சபாஷ், அட போட வைத்தது. ஆம், ஏதோவொரு வேளையில் எல்லாருக்குமே நினைவூட்டல் என்பது தேவைப்படுகிறது. புத்தனுக்கும் அப்படியே.

உமா மோகன் சொன்னது…

நினைவூட்டல் மட்டுமல்ல கோபி ஆரவார அங்கீகாரம்
கூடத்தான் வேண்டியிருக்கிறதோ

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...