அபி உலகம் 3

விடுமுறை நாளின்
சித்திரங்கள்
திறந்தன...
இன்றைய வானவில்லில்
நீல நிறத்தையே காணோம்!
வானம் வரைந்தே
தீர்ந்து விட்டதென்றாள் அபி!
**************************
அபிக்கு
யானை,சிங்கம்,
புலி, காண்டாமிருகம் ,
உயரம் குறைவான
ஒட்டைச்சிவிங்கி
எல்லாம் வேண்டுமாம்
கரடியைப்போலவே
உட்கார்ந்து விளையாட....
********************************
நெய்ச்சோறு ,
நூடுல்ஸ் ,பழத்துண்டுகள்,
ஐஸ்க்ரீம் ....
கொஞ்சிக்கொஞ்சி
அபியால் ஊட்டப்படும்
பொம்மைப்  பரிவாரங்களைப்
பார்த்தால்
அம்மாவுக்குப் பயம்தான்
அவை
கேட்டுவிடுமோ என்று...  

கருத்துகள்

sathguna இவ்வாறு கூறியுள்ளார்…
Yaarindha Abhi?Avalin (drushti)bommayaga yenakku aasaya irukku.-sathguna
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நம் கனவுப்பெண்ணுக்கு ஒரு பெயர் வைத்தால்...
ramgopal இவ்வாறு கூறியுள்ளார்…
குழந்தைகளின் உலகம் தான் எவ்வளவு புதிரானது, புதுமையானது, நமக்கெல்லாம் எவ்வளவு பிடித்தமானது. ஒவ்வொரு அசைவிலும் கவிதை, கதை, பாடல், கனவு என கலைகளின் பிறப்பிடமாய் எப்போதும் குழந்தைகள்!!!!. இவர்களுக்கான உலகத்தில்தான் நமக்கு எல்லாம் கிடைக்கிறது.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நாமிருந்த இடம்.. நாம் மறந்த இடம் ..நாம் உயிர் பெறும் இடம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை