செவ்வாய், ஜனவரி 24, 2012

எல்லா இடமும் சதுர அடி

கருவைக்காடு 
இருந்திருக்கலாம்...
அறிந்த ,அறியாப் பெயர்களுடன் 
மரங்கள் நின்றிருக்கலாம் ....
எங்கள் கிராமம் போல 
வயல் நடுவேயோ ...
தோப்புகள் தாண்டியோ 
இருந்திருக்கலாம் ...
இன்று நாற்புற மதில் தவிர்த்து 
வீடுகள் சூழ நிற்கும் 



.

.

 

மயானம்..!.
அண்டை வீடுகளின் 
தொலைக்காட்சிப் பாடல் 
கூத்தனுக்குப் 
பழகியிருக்கலாம் 
நாற்றமும் சப்தமும் 
பழகிய நம்மைப் போல ..

7 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மனம் கவர்ந்த
யதார்த்த நிலையை அழகாகச் சொல்லிப் போகும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

உமா மோகன் சொன்னது…

நன்றி நண்பரே உங்கள் வாழ்த்து தொடர விழைகிறேன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு வரியும் அருமை! பாராட்டுக்கள் ! நன்றி சகோதரி!

கீதமஞ்சரி சொன்னது…

உயிர்களையும் பிணங்களையும் பிரிக்கிறது ஒற்றை மதில். இடையில் திண்டாட்டமாய் கூத்தனின் வாழ்வு. மயானத்திலும் அமைதி தொலைத்தவன். நெகிழ்த்தும் யதார்த்தம். பாராட்டுகள் சக்தி.

உமா மோகன் சொன்னது…

நன்றி தனபாலன் தோழர்.

உமா மோகன் சொன்னது…

நன்றி!உண்மை கீதா பிறப்பறுக்கும் பெம்மானை எங்கு நிறுத்தியிருக்கிறோம்....

ஞா கலையரசி சொன்னது…

பழங்காலத்தில் எங்கோ தொலை தூரத்தில் ஒதுக்குப்புறத்திலிருந்த மயானம் இப்போது வீடுகளுக்கு மத்தியில்!
போகிற போக்கைப் பார்த்தால் மயானத்தையும் பிளாட் போட்டு விற்றுவிட்டு ஆறடி நிலம் கூட மனிதனுக்குச் சொந்தமில்லாத நிலை ஏற்பட்டு விடும்!
நல்ல கவிதை! பாராட்டுக்கள் உமா மேடம்!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...