நிறம் தந்த சாமி


 

அமர்ந்து எழுகையில் 
வண்ணத்துப்பூச்சி 
தடவிச் செல்லும் 
மினுங்கல் பொடியா?
சந்திரபிறை பொழியும் 
இரவின் ஒளித்துளியா?
ஆரஞ்சு குழம்பாய் 
அரங்கேறும் 
கதிர்ச்சொட்டா?
விரிந்த நீளத்தின்
மேக நீலங்களில்
ஏதோ ஒரு நீலமா?
துளிர்ப்பச்சை....
இலைப்பச்சை....
வெளிர்ப்பச்சை....
என்னை வரைந்த தூரிகை 
எதில் தோய்ந்தது...? 
 

கருத்துகள்

கோவி இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கவிதை..
Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
சிந்தனையின் ஆழமும்
சொற்களின் வீரியமும்
பிரமிப்பூட்டுகிறது
வாழ்த்துக்கள்
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ரமணி சார்.இந்தப் பின்னூட்டம் உங்கள் பெருந்தன்மை.!
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி நண்பரே
தொடர்ந்து வருக..உங்கள் கருத்தைத் தருக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை