இப்போது பரணில்...

மல்லிகை கனகாம்பரம் 
நெருக்கித் தொடுக்கும் நேர்த்தி...
இழைகோலமா
கரைபதம் 
கருகா முறுவல் பக்குவங்கள் 
பொடிகளின் 
அரைபதம்,இடிபதம் 
கொதிமணம்
கொண்டறியும் குறைகள் ,
வகை வகையாய் வழிமுறைகள்..
**************************************.
பொட்டலம் ,பொதிகள் 
சுமந்த 
கழுதை முதுகின் 
கற்பூரப் பொட்டலம்.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை! பகிர்வுக்கு நன்றி சகோதரி !
கீதா இவ்வாறு கூறியுள்ளார்…
காலத்தின் கோலம்!
கழுவேற்றப்பட்டுவிட்டது நம் பாரம்பரியம்,
கழுதையின் முதுகேற்றப்பட்ட கற்பூரப்பொட்டலமாய்!
ஆதங்கம் வெளிப்பட்டவிதம் அநாயாசம். பாராட்டுகள் சக்தி.
Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
இரண்டு நிலைகளையும் சந்திக்கிறவர்கள் பாடுதான்
தர்ம சங்கடம்.நான் உட்பட
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
என்னுடைய இந்தப்பதிவுக்கு வருகை தரும்படி தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

http://geethamanjari.blogspot.com.au/2012/02/blog-post.html
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி கீதா !ஆயிரம் தத்துவங்கள் சொல்லும் மனதும்
சிறு தலையசைப்பை எதிர்பார்க்கிறதே !நான் எம்மாத்திரம்?
மகிழ்ச்சியில் மனம் தளும்புகிறது .ஏதோ ஒரு நேரம் ...மின்னலாய்
ஓடும் கவிதையை எழுத்தாக்கி மின்வெளியில் பதியமிட்ட நேரங்களை
தன பின்னூட்டங்களால் அர்த்தப் படுத்திக் கொண்டிருந்த கீதா
அங்கீகாரமும் தந்திருக்கிறார் ...நன்றி...நன்றி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார் தனபாலன் சார் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்