இப்போதும் பலிக்கவில்லை.....

தேவதைகள்
எப்படியிருப்பார்கள் ....
பாரதிராஜாவின் பாடல் போலா...
சித்திரக் கதைகளின்
சிறகுகளோடா .....
ஆடை மாற்றம்
நிகழ்ந்திருக்கலாமோ...
சலனமற்ற பார்வையா?
புன்னகைப்பது உண்டா....
அறியாமல்
தவறவிட்டு விடுவேனோ
அச்சத்தால் கேட்கிறேன்...
கேள்விகளை முடித்து
நிமிர்ந்தபோது
மேசையின் எதிர்ப்புறம்
அடையாளம் சொல்லமுடியா
நிறத்தில்
அழகிய மலர்
தேவதை வந்ததன்
அடையாளமாக...

கருத்துகள்

sathguna இவ்வாறு கூறியுள்ளார்…
Valamana karpanai.Asandha neraththil vandhu asaththubavaley Devathai.
Illavittal summa viduvoma avalai?-sathguna
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
எப்போதாவது நாம் நேரில் சந்திக்கலாம் ...ஒரு ஆசைதான்..
ramgopal இவ்வாறு கூறியுள்ளார்…
தேவதைகளின் தரிசனம் மலர், குழந்தைகள், அசத்தலான காட்சி என பெரும்பாலும் வடிவங்களின் வாயிலாகவே கிடைக்கிறது. ஒருவேளை தேவதை என்பது அதுதானோ?
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
வடிவம் அறியாதவரைதான் சுவாரஸ்யமோ

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை