நினைவின் சரத்தில்

அந்த மனோரஞ்சிதம் 
வருடங்கள் கடந்தும்  
வாடாமல் சிரிக்கிறது !
பிரத்யேக மணமும் 
பெயரற்ற நிறமும் கூட 
மங்குவதேயில்லை...
வெல்வெட் துணியிலிட்ட 
முத்துமாலைகூட
சற்றே 
பழுத்த வெண்மையில் ...
ஆனால் 
என் ஒற்றை மனோரஞ்சிதம் 
முணுமுணுத்த பாடல் வரிகளையும் 
வெளுத்த கனவுகளையும் 
இதழ்களாய் இணைத்தபடி 
வாடாமல்....  

கருத்துகள்

sasikala இவ்வாறு கூறியுள்ளார்…
நினைவின் சரத்தில் நீங்காமல் வந்து போகிறது என் பசுமை நினைவுகளும் அருமை
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! நன்றி !
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி நண்பரே வருகைக்கும் பதிவுக்கும்
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சசிகலா வருகைக்கும் பதிவுக்கும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை