ஆறாவது பூதம்

இடம் பொருள் 
அறியாக்காற்று 
ஏவலுக்குக்கட்டுப்பட்டு ,......
*********************
அடக்கமாக 
தீக்குச்சி நுனியில் 
அக்கினிக்குஞ்சு .
****************************
நட்ட கல்லுக்குள்
நாமே 
பூமிபுத்திரர்!
****************************
கண்ணுக்கெட்டியவரை
விண்
என்றும் சொந்தம்!
******************************
ஜலப்பிரவாகம் 
சிறு குடுவை 
அல்லது 
அணைமதகுகளுக்குள்...
********************************
மனசு...?
மனசு....?
மனசு...?  
 

கருத்துகள்

Ramani இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை அருமை
ஐந்தின் இந்த நிலைக்கு இந்த ஆறாவதுதான்
காரணம் ஆயினும் இன்னும் அடங்காது திரிகிறதே
முத்தாய்ப்பாக மூன்றுமுறை சொல்லிப் போனதே
கவித்திறன்
தரமான பதிவு.வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்