திங்கள், ஜனவரி 16, 2012

ஆசை ஆசை




அகன்ற 
மலையடிவாரம் ..
விஸ்தாரமாய் வீசிப்போக 
காற்றுக்கு 
 
ஆசை... 
விழுந்தால் 
விரிவாக வளரலாம் 
விதையின் ஆசை...
ஆனால்...
வென்றது  மனிதன் ஆசை...
கொடியும் தோரணமும் 
குறுக்கு சாலைகளுமாய் 
புதிய நகர் 
இனிதே உதயம்...

7 கருத்துகள்:

ramgopal சொன்னது…

ஆம் இயற்கைக்கு இருக்கும் நியாயமான அதே சமயம் உரிமையான ஆசையையும் மனிதன் தான் எப்படி மறித்து வருங்காலத்திற்கான சமாதிகளை எளிதில் செய்து விடுகிறான். இலாப வெறி ஆசையை விடவும் கொடுமையானது.

உமா மோகன் சொன்னது…

உண்மை

ஞா கலையரசி சொன்னது…

தன் ஆசைகளை மனிதன் பூர்த்தி செய்ய மறுப்பதால் இயற்கை அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து புயலாகவும் ஆழிப்பேரலையாகவும் மாறி தன் கோபத்தை வெளிப்படுத்தி மனிதனை வெல்ல நினைக்கிறதோ?

சசிகலா சொன்னது…

தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

rajamelaiyur சொன்னது…

உண்மைதான் விளைநிலங்கள் பல இப்பொழுது வீட்டு மனைகளாக .. விவசாயம் எங்கே மாடியிலா ?

உமா மோகன் சொன்னது…

நன்றி ராஜபாட்டை ராஜா

Rathnavel Natarajan சொன்னது…

கொடியும் தோரணமும்
குறுக்கு சாலைகளுமாய்
புதிய நகர்
இனிதே உதயம்...

அருமை. நிலைமை மோசமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.
நல்ல பதிவு. நன்றி.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...