உன்னை விட்டால்.


         

படபடத்த 
தாள்களிலிருந்து
எழுத்துக்கள் 
எம்பி 
       எம்பி 
முறையிடுகின்றன....
வசவுக்குள்   போடும்போது 
வலிப்பதாகவும் 
பொய்யில் சேர்க்கும்போது 
புண்ணாவதாகவும்
வறுமைக் காட்சியில் 
தமக்கே 
வன்முறை வளர்வதாகவும் 
காதல் வசனங்கள் 
கரைத்துவிடுவதாகவும் ....
****************************************
நீயாவது 
உணர்கிறாயே என்றேன் ! 

கருத்துகள்

கீதா இவ்வாறு கூறியுள்ளார்…
எழுத்துக்களின் உணர்வினை எடுத்துக்காட்டிய வரிகள் அருமை. பாராட்டுகள்.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கீதா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை