புதன், ஜனவரி 11, 2012

துளிகளால் சமுத்திரம்


சிவன் கோயிலுக்கு
விளக்குப்போட
அம்மா எடுத்துப்போகும்
எண்ணைக்கிண்ணம்  அளவுதான்
இருந்தது!
நான்
திவலைகளாகச் சொட்டுவதற்கு
அதுவே தாராளம்...
அப்போதுதான்
நீ வந்தாய் ...
நீயும் விட இடம் கேட்டாய்
உன்னிடம்
பாவத்தால் சம்மதித்தேன் ...
உன்னிடம்
நேசத்தால்...
உன்னிடம்
இரக்கத்தால்/...
உன்னிடம்
வேறுவழியின்றி....
பிறகு
என் சம்மதத்துக்கே வேலையில்லை...
கிண்ணம்
திருவண்ணாமலை தீபக்கொப்பரையாகிவிட்டது!

    ஏ
       றி
அதற்குள் கவலையை வடிக்க
ஏணிகூட....
ஏற்றி இறக்குவது
யாரென்று
தெரியாமலே

நான் திவலை...திவலையாக...
...
 
    

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

ஒட்டகம் நுழைந்த கூடாரமாகிவிட்டது முடிவில். அதற்கும் முடிவில். நிதர்சனம் மிக்க வரிகள்..

உமா மோகன் சொன்னது…

நன்றி கீதா..நாம் நம் கவலைகளின் பாத்திரம் மட்டுமல்ல எல்லோருடையதையும் சுமந்து..

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...