கீதமஞ்சரிக்கு நன்றி

முன்னிரவு,அதிகாலை ஆட்டோ தடதடப்பு ,எப்போது என்றில்லாமல் பூக்கும் கவிதைகளை வலைப்பூவில் இட்டேன்.வருகை தந்து வாழ்த்தி பதிவிட்டு வளர்த்துக்கொண்டிருக்கும்
அன்புள்ளங்களுக்கு இந்த அங்கீகாரம் அர்ப்பணம். குறிப்பாக ராம்கோபால் எஸ் வி வி சார்!மகிழ்வைத் தந்த கீதமஞ்சரி வலைப்பூவின் கீதாவுக்கு நன்றி! 

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் பல கவிதைகளில் தென்படும் உணர்வுகளோடு ஒரு மெல்லிய இழையென என் மன உணர்வுகளும் இழைந்தோடக் கண்டு, மனம் லயிக்கும் ஒத்த உணர்வுகளால் பெரிதும் வியந்துபோவதுண்டு. என்னால் சிலவற்றை எழுத்தில் வடிக்க இயலாமல் தயங்கி நிற்கும் வேளைகளில், தங்கள் கவிதைகள் அதை அநாயாசமாகச் சொல்லிச் செல்வதைப்பார்த்து மலைத்திருக்கிறேன், சக்தி. தங்கள் சொல்வீச்சும், எடுத்தாளும் கருக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே தங்களுக்கு இவ்விருதினை வழங்குவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தங்கள் நன்றிக்கு நன்றி. மேலும் உற்சாகத்துடன் எழுத வாழ்த்துக்கள்.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மீண்டும் நன்றி.பொறுப்பை அதிகப்படுத்தி இருக்கிறீர்கள் !சங்கிலியைத் தொடரும்பணிக்கு பணிவான நன்றி
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் சகோதரி !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை