கண்டத்தில் நிறுத்தா விஷம்கடகடவெனக்
குடம் குடமாய்க்
குடித்து...
துரோகம்,மோகம்.
காமம் ,சீற்றம்
ஒடுக்கம்
சகலமும் செரித்து
நீலத்தை
வானிலும் கடலிலும்
பிழிந்துவிட்டு
நடமாடுகிறாள் நீலா!
நீலமாயா...
நீலவாகினி...
நீலயோகினி...
நீலாயதாட்சி...
நீலோத்பலா...

இளமஞ்சள் சுடிதாரில்
பச்சைப் புடவையில்
ஏதேனும் ஒரு
சீருடையில்
இருசக்கர வாகனத்திலோ
பேருந்திலோ
நடைபாதையிலோ
பார்க்க முடிந்தவர்க்கும்
பக்கத்திலுள்ள நீலா
தெரியமாட்டாள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை