குருவே சரணம்

தகிப்பின் அச்சமோ 
ஒளியின் பிரமிப்போ  
நீள,அகல,தூர 
பிரக்ஞையோ 
இன்றி .....
பறவைகள் பறக்கின்றன 
சூரியனைத் 
தாண்டியும்,சுற்றியும் 
குறுக்காகவும்....   


கருத்துகள்

கலையரசி இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை தான். தடைகளைப் பற்றியோ,விளைவுகளைப் பற்றியோ
கவலைப்படாதவர்கள் தாம் சாதனை நிகழ்த்துகிறார்கள். வரலாறு படைக் கிறார்கள்.கவிதை நன்று உமா!
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
பறப்பது இன்னும் பிரமிப்பாகவே இருக்கும் வாழ்க்கைக்காரர்கள் நாம்.!
நன்றி கலா !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்