வியாழன், மார்ச் 15, 2012

நஞ்சாகும் அமுது

சோப்பு விற்க
(எல்லாம் திறந்திருந்தால்)
முப்பது வீடாவது
ஏறி இறங்க வேண்டும்.....!

தள்ளுவண்டி காயின்
பசுமை வாட
தராசுக்கு வேலையில்லை..
தெருமுனை உணவக
தள்ளுபடிவிலையே மிஞ்சும் !

மூட்டை இறக்க வாகாக
அந்திவரை நிற்காது
வந்த வாகனம் ...!

தலைக்கவசத்துக்குள்ளும்
பேருந்து நெரிசலிலும்
பெருகும் ஆறு
உதிர்க்கும் சொல்லில் எல்லாம்
லாவா தெறிக்கிறது ...!

இங்கேயே
கிடந்து இறைபடும்
சூரியனே
எட்டப்போ கொஞ்சம்...
பிரபஞ்சம் பெரிதாமே....? 

4 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html

உமா மோகன் சொன்னது…

நன்றி கீதா.மீண்டும் மீண்டும் புதிய தளங்களுக்கு விரல்பிடித்து
இட்டுச் செல்லும் தேவதையே நன்றி .

rajamelaiyur சொன்னது…

//தலைக்கவசத்துக்குள்ளும்
பேருந்து நெரிசலிலும்
பெருகும் ஆறு
உதிர்க்கும் சொல்லில் எல்லாம்
லாவா தெறிக்கிறது ...!
//

அழகிய வரிகள்

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி ராஜா

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...