போக்குவரத்து நெரிசல்

    
எதிரிலுள்ள 
 
அடுக்ககத்தின்
 
பின்பக்கத்திலிருந்து  கிளம்பி,
 
மின்வடம்,தந்திவடம்
 
அளவிலாக்குடியில் தன்னிலை
 
இழந்த பாதசாரிபோல்
 
அண்ணாந்து கிடக்கும்
 
தொலைக்காட்சிக்குடைகள் 
 
அலைபேசிக் கோபுரங்கள்,
 
வழிமறித்து வேடிக்கைபார்க்கும்
 
நட்சத்திரங்கள் தாண்டி 
 
கண்ணுக்கெட்டும் 
 
ஜன்னல் சதுரத்துக்குள் 
 
நிலா 
 
வந்து சேரும்போது 
 
இரவு உணவு நேரமாகிவிடுகிறது ! 
 
                   12.3. 12  உயிரோசையில் வெளியானது  

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
நிலவை ரசிக்கும் வேளையில் வந்தால்தானே நிலவும் அழகு.

பாராட்டுகள் மேடம்.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகின்றன..
மேடம் தவிர்க்க வேண்டுகிறேன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை