விலகிய சக பயணி

பரபரப்பான                                                                                 
நகரச் சந்தடியில் தொடங்கியது ...
புறநகர்த்தனி வீடுகள்,
மிஞ்சிக் கிடந்த
வயல்பரப்பு
தொலைதூரச் சிறுமுகடு
தப்பிய மரக்கூட்டம்
சிற்றூர்க் கடை வெளிச்சங்கள் ....
கூடவே.......
நகர்ந்துகொண்டிருந்த
மேகங்களைக் காணோம் ...........
அனிச்சையாய்
வாய் துடைத்து
உறக்கம் மீண்டபோது.

முந்தையநாள் படக்கதையை
சுவாரசியமாய் நிகழ்த்துகையில்
கண் சொக்கும் ஆச்சியிடம்
கோபித்து எழுந்து செல்லும்
பேபியக்கா போல
மேகங்களும்
மீண்டுவரக்கூடும் !

   

கருத்துகள்

இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
முந்தையநாள் படக்கதையை
சுவாரசியமாய் நிகழ்த்துகையில்
கண் சொக்கும் ஆச்சியிடம்
கோபித்து எழுந்து செல்லும்
பேபியக்கா போல
மேகங்களும்
மீண்டுவரக்கூடும் !


"விலகிய சக பயணி"யை வரவேற்போம்..
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
முதலில் உங்களை வரவேற்கிறேன் இராஜராஜேஸ்வரி!
நன்றி !
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி தேனம்மை.தங்கள் வரவு நல்வரவாகுக
கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
விலகலையும் அழகாய்க் காட்சிப்படுத்திய கவி வரிகளில் சொக்கிப்போனேன். அசத்தல் சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கீதா !பல சமயங்களில் விலகல் இருப்பைவிட அழுத்தும் இருப்பு !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை