யுகங்கள் தோறும்

காரை பெயர்ந்த 
கட்டைச்சுவர் ..
புதுக்கருக்கில் 
சுவரொட்டி மறுக்கும்                                                          
ஆள் உயரம்...
...............
மதில்கள் மாறினாலும் 
விரிந்த விழிகளோடு 
பூனை அங்கேயே...
கண்ணாடிச் சில்லும் 
கம்பிவலையும் கூட 
அரூபமாய்த் தள்ளிவிட்டு 
தன இடம் விடாமல் 
எப்போதும்போல் 
இப்போதும் பூனை...
மதில் நிலையற்றது !
பூனை நிலையானது!     
                                        
19 3 12 உயிரோசையில் வெளியானது
 
 
 
 
 

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
'மதில்மேல் பூனை' நிலைப்பாட்டை நிலைக்கவைக்கவேனும் நிலைக்கவேண்டும் பூனை, நிலையற்ற மதில்மேலும்.

வசீகரிக்கும் கவிதை. பாராட்டுகள் சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நாம் பலரும் மதில்மேல் நின்றே வாழ்வைக் கழிக்கிறோமே எனச் சமயங்களில்
தோணும் கீதா .நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை