உடை மாற்றும் கனா

ஏப்ரல் 23  வல்லமை இணைய இதழில் வெளியானது


உப்புக் கரிந்த
உதடுகளோடு
வியர்வையின்
வீச்சம் தாளாது
வேண்டுகிறார்கள்
வெள்ளுடைத் தேவதைகள்…..
சிலுவைகளை விடக் கனமான
சிறகுகளையும்
நடமாடத் தோதிலாது
தடுக்கும் ஆடைகளையும்
புறக்கணித்து
எளிதான புதிய
அவதாரம் எடுக்க வேண்டுமாம்.
யாராவது
கனவு காணுங்கள்…
ஓவியம் கற்றவராயிருந்தால்
கூடுதல் மகிழ்ச்சி!

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
ஹூம்... தேவதைப் பிரச்சனைகளை அலசவும் ஒலிக்கிறதே ஒரு குரல் இங்கே. விரைவில் ஆசிர்வதிக்கப்படலாம் தேவதைகள்.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் அந்த நம்பிக்கையில்தான் தேவதைகள் நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை