திரியும் பால்


ஏப்ரல் 23  உயிரோசையில் வெளியானது

முகம்..
        உடல்...
முகம்...
       உடல்...
தாவியலையும் விழிகளோடு
வழிதவறிய ஆடுகளை
அனுப்பியவாறு
உன் பார்வை...

தேடும்
சங்கடமணிந்து தொடர்கிறது
என்பார்வை...

சாவியாய்
இறைந்து கிடக்கின்றன
உரையாடலில்
நீ
மற்றும்
நான்
உதிர்த்த சொற்கள்...
                                           

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
தலைப்பிலேயே சர்வமும் அடங்கிவிட்டது சக்தி. தடுமாறும் உணர்வுகளோடு பயணிக்கும் பருவத்தில் தடம்மாறா உறுதியோடு அழகான கவிதை.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் கீதமஞ்சரி...கண்ணோடு கண் பொருத்திப் பேச வல்லார் நட்பே
பதமாய் இருக்கும்.நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்