ஒளியின் வீடுகள்

வெளிச்சத்தைவிட
விளக்குகள்
மதிப்பாகிவிடுகின்றன
வெளிச்சம்
விளக்குவழிதான்                                                                    
வரமுடியும் என்றானபோது....
****************************
விளக்குகளை
உருவாக்குகிறவர்கள்
வெளிச்சத்தை
உருவாக்கிட முடிவதில்லை..
****************************
நேற்றிருந்த வெளிச்சம்
விளக்கினுள்
திரும்பாவிடினும்
புதிய வெளிச்சத்தைக்
கூட்டிவரும்
தோழமையுடன்
இருளை வரவேற்கின்றன
விளக்குகள்.
***************************
பழைய விளக்கு
புதிய வெளிச்சம்.

கருத்துகள்

ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை.
கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
இருள் விலக்கும் விளக்கின் வெளிச்சம் விளக்கும் விளக்கம் அழகு. விளக்குக்கும் வெளிச்சத்துக்குமான பிணைப்பை வெளிச்சம்போட்டுக் காட்டும் கவிதையும் அழகு. பாராட்டுகள் சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி ராமலக்ஷ்மி .தங்கள் வரவு நல்வரவாகுக
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
விளக்கும் வெளிச்சமும் இருள் குறித்த அச்சங்களை விலக்க
வாழ்க்கை ஒளிமயமாவதே நம் வேண்டல் இல்லையா
கீதமஞ்சரி .அன்பான நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை