ரோஜா ரோஜாவல்ல....

ஏப்ரல் 30 திண்ணை இணைய இதழில் சந்தேகமும் எரிச்சலுமாய்ப்                         
  
பார்க்கிறான் பூச்செடி விற்பவன்…
மஞ்சள்,வெள்ளை,
சிவப்பு,மரூன்,ஆரஞ்சு ..
இன்னும் பெயர் சொல்லவியலா 
நிறச்சாயல்களில்
எதையும் தேர்ந்தெடுக்காது 
எதையோ தேடும் 
என்னை அவனுக்குப்
 பிடிக்கவில்லை…
“மூணுநாள் கூட வாடாது,…”
“கையகலம் பூ….”
அவன் அறிமுக இணைப்புகளைக்
கவனியாது ,
“நா கேட்டது ….லைட் ரோசுப்பா …
இவ்ளோ பெருசா பூக்காது…
மெல்லிசா…சட்டுன்னு உதிரும்…
அந்த வாசனையே இதுல இல்ல்லியே….”
வாரந்தோறும் 
நான் தரும் மறுப்புகளில் 
என் நினைவில் படிந்த
ரோஜாவைத் தேடிக்கொண்டே இருக்கிறான் 
அவன்……

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
பன்னீர் ரோஜாக்களின் வாசம் இந்தக் கவிதையிலும் வீசக்காண்கிறேன். பாராட்டுகள் சக்தி.

பூச்செடி விற்பவனின் புதிர்ப்பார்வைக்கு அது பிடிபடாதது பரிதாபம்தான்.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கீதமஞ்சரி.ஒத்த அலைவரிசையே உணர்வுகளை உணரவைக்கும்
என நிரூபித்துவிட்டீர்கள்.ஆனால் பூச்செடி விற்பவர்களே நம்மைச்சுற்றி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை