தூறலுக்குள் இடி இறக்காதீர்

ஏப்ரல்  22 திண்ணையில் வெளியானது

-எடுக்கப்படாமல்
ஒலித்து நிற்கும்
 
தொலைபேசிமணி…
 
ஏகப்பட்ட
 
கேள்விக்கிளை விரிக்கிறது…
 
அச்சம்,எரிச்சல்,
 
ஆவல்….
 
ஏதோ மீதூர ,
 
மீண்டும்,மீண்டும்…முயலவேண்டாம்!
 
அந்த முனையில் ,
 
உக்கிரமான வாதம்
ஓடிக்கொண்டிருக்கலாம் !
 
உருக்கமான பிரார்த்தனை
பக்கத்தில் நடக்கலாம்..
 
கடன்காரனோ,
 
அதிகாரியோ,
திணறடித்துக் கொண்டிருக்கலாம்…
 
மரணச் சடங்கோ,
விபத்தோ,கூட்டமோ,
தவிர்க்கவியலா தவிர்ப்பாயிருக்கலாம்!
 
தவறவிட்ட உறக்கம்
நேரங்காலமின்றி
வாய்த்திருக்கலாம்.-

கருத்துகள்

ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
/எடுக்கப்படாமல் ஒலித்து நிற்கும்
தொலைபேசிமணி…/ விரித்த கேள்விகளுக்கு விடைகளாக பகிர்ந்த அனைத்தும் சிந்திக்க வைக்கின்றன. நல்ல கவிதை சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி ராமலக்ஷ்மி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை