இருந்தேன்....இருக்கிறேன்....இருப்பேன்...

மே 7 உயிரோசையில் இடம் பெற்றது

வியந்ததும்,ரசித்ததும்,

 கொண்டாடியதும்
நீதான்....

துளிர்பச்சை,அடர்பச்சை,

இலைப்பச்சை என்பாய்....

பழுப்பு படர்கையில்

அசுவாரசியம் மேவ,

சருகு கண்டு

சலிப்பதும் உண்டு...

சூரியன்,ஆடு,புழுதி,

மழை,நிலா.....

எப்போதும்,

நான் இருக்கிறேன்

இலையாக.....

வாழ்வைக் கொண்டாடிக்

கைதட்டும் 
ஒரு தருணம் ,

சருகாகி

உதிர்ந்துவிட்டேன் என்பாய்...

நான் இருக்கிறேன்
இன்னொரு துளிரில்......

கருத்துகள்

ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
/நான் இருக்கிறேன்
இன்னொரு துளிரில்....../

நம்பிக்கை துளிர்க்கும் வரிகள்! அருமை.
கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
பச்சையம் உதிர்த்த சருகுகளில் பார்வைகள் நிலைத்திருக்க, துளிர்கள் பாராமுகமாய்ப் போவது விநோதம்தான். அதனாலென்ன? நமக்குள் இருக்கும் நம்பிக்கையை நாமறிந்தால் போதுமே. அழகான கவிதை சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நம்பிக்கைகளோடு வாழ்வைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது உயிர் !வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி! கீதமஞ்சரி !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்