தேவை தேவதைப் பிறவிமாங்கல்ய வரம் நாடிக் 
கயிறுகளையும் ,
பிள்ளைப் பேறுவேண்டி 
தொட்டில்களையும் ,
வளையல்களையும்,
முணுமுணுக்கும் உதடுகளோடும் ,
கரையுடையத் துடிக்கும் 
விழிகளோடும் 
கட்டிக் கொண்டிருந்த 
பழக்கத்தில் 
தொங்கவிடுகிறோம்
தேவதை உடைகளை....
இறுக்கம் உடைக்கவும் 
எங்கும் உலவவும் 
வேண்டி 
இந்த வேண்டுதல்!
உற்றுப் பாருங்கள்...... 
உங்கள் வீட்டு 
முருங்கையில் கூட 
ஒன்றிரண்டு தொங்கலாம்.
ஆகிவந்த மரமென்று 
அடுத்தவரும் கட்டலாம்.....

கருத்துகள்

ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
மனிதர் தம் வாழ்வை நம்பிக்கையுடன் நகர்த்த உதவும் வேண்டுதல்களில்தான் எத்தனை வகைகள். நல்ல கவிதை சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் ஏதோ ஒரு பிடிப்பு தேடிக்கொண்டே நகர்கிறோம் அல்லவா.நன்றி ராமலக்ஷ்மி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்