அவளாக வேண்டும்

ஆதிகடவுளின் சாயலில் 
சுருள்முடி 
நெற்றி வழிந்து காற்றிலாட ,
பொருளறியாப் புன்னகை 
மிதக்கும் முகத்தோடு 
மிதிவண்டி ஓட்டிச் செல்லும் 
சிறுமியாக 
ஒரு வாய்ப்பளியுங்கள்...
இயலாதென்றால் 
அவள் 
முணுமுணுக்கும் பாடலாக ,
விரும்பி அணியும் 
மஞ்சள்வண்ண ஆடையாக,
அலட்சியமான பாவனையில் 
தோளில் மாட்டிச் செல்லும் 
பையாக....
நளினமாகக் கையாளும் 
மிதிவண்டியின் 
குஞ்சலங்களாக....
ஏதாவதொன்றில் 
என்னை உள்ளிருத்துங்கள்....
அவளது அன்றாடப் பயணம் தரிசிக்கும் 
மரத்தடியாக 
மாற்றினாலும் சரியே !

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
கடவுளிடம் நேரப்பட்ட கோரிக்கை நிறைவேறும் நாளில் அவளாகவே இருந்திட வாழ்த்துக்கள். வாசிப்பவரையும் தனக்குள்ளிழுக்கும் வசியம் கொண்ட உங்கள் கவிதைக்குப் பாராட்டுகள் சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி கீதா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை