பொருள் விளங்காப் புள்ளிகள்

 
தொடக்கத்திலேயே 
முடிவும் 
சேர்ந்துதான் இருக்கிறது.
கேள்வி,ஆச்சரியம் 
இரண்டின் கீழும் 
இடும் புள்ளிகள் 
இணைக்கவும் ,பிரிக்கவும் 
தெரிந்து வைத்திருக்கின்றன ....
தோளில்
ஆட்டுக்குட்டியோடு 
வனமெங்கும் 
புள்ளிக்குப்பின் 
போய்க்கொண்டே......இருக்கிறோம் 
முடிவுறாப் பயணமாக.... 

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆட்டுக்குட்டிகளைத் தோளில் போட்டுக்கொண்டு வனமெங்கும் தேடித்திரியும் நமக்கு கண்ணெதிரில் இருக்கும் வாழ்க்கை மட்டும் எங்கே புலப்படப்போகிறது? தேடித்தேடியே சோர்ந்துபோகிறோம். அருமை சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
சோர்வின் வெம்மையில்,இப்படி இனம் காணும் தோழமை நிழல் இதம்.நன்றி கீதா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை