மாயச் சலங்கை


ஜூன்15 கீற்று இணையத்தில் வெளியானது 


உதிர்ந்து கிடந்த 
எழுத்துக்களைப் பரிசீலித்துக் 
கொண்டிருந்தேன்...
சலங்கையொலி 
தூரத்தில் தொடங்கியிருந்தது..
நாட்டியக்காரி யாரும் 
நடக்க வாய்ப்பிலாத 
இடமும் பொழுதும் தாண்டி 
என் எழுத்துக்களைச் 
செல்லம் கொஞ்சவிடாமல் 
இம்சித்து நெருங்கியது 
அந்த ஒலி...
பூம்பூம் மாடோ, கிருஷ் வேடதாரியோ ...
சுற்றிவளைத்த ஆர்வத்தினால் 
வாசல் வந்தபோது 
வெறித்த சாலையில் 
மணலாவது கொஞ்சம் கிடந்திருக்கலாம்.
 

கருத்துகள்

ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக அருமை.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி ராமலக்ஷ்மி
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி
திண்டுக்கல் தனபாலன்
நித்திலம்-சிப்பிக்குள் முத்து இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கவிதை உமா மோகன்.வாழ்த்துகள்.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் அன்பான வருகைக்கும் பரிவான வாழ்த்துக்கும் நன்றி நித்திலம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்