வலி பற்றிய கதைகள்...

10 9 12  உயிரோசை இணைய வார இதழில் வெளியானது


வலியின் திரவம் 
வழிந்தோடியது...

காய்ந்த கோடுகளின் 
அடையாளம் 
வரி வரியாய்ப் படிந்திட 
வலியின் கதைகளைப் பேசியபடி 
பொழுதுகள் விடிகின்றன...
முடிகின்றன..

நேற்றைய வலியோ ,இன்றையதோ...
சென்ற வருடத்தையதோ..
உன்னுடையதோ,என்னுடையதோ...
சொல்லிக்கொள்ள,
வியக்க,ஒப்பிட...
வலிகள் ஏராளமாய்!

வலி பிழிந்த நொடிக்குத் 
தொடர்பிலாது 
தக்கைச் சொற்களாய் மிதக்கின்றன 
வலி பற்றிய கதைகள்  -

கருத்துகள்

Revakisvary இவ்வாறு கூறியுள்ளார்…
vali illai yenil vaazgaiyin swarasthiyathai, suvadugalai... naam elithil maranthiduvom

-Revakisvary
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் நாம் விரும்பினாலும் இல்லையென்றாலும் வலிகளோடுதான் வாழ்க்கை.
நன்றிரேவகிச்வரி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை