அபி உலகம் -10

சாலை தாண்டி ஓடித் திரும்பும் 
அபியைத் திட்டுவதா ,
பத்திரமாக மீண்டதற்கான 
பெருமூச்சோடு 
அணைத்துக் கொள்வதா 
எனத் திகைத்திருக்கும் 
அம்மாவை 
மேலும் குழப்புகிறாள் 
அந்தக் காலிமனையில் 
கொத்தித் தின்ன ஏதுமற்று 
ஏமாந்து திரும்பும் 
காக்கைகளிடம் 
காட்பரிஸ் பகிர்ந்து 
திரும்பும் அபி...

கருத்துகள்

இராம்கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
அட போங்க. பிரமாதம். பேசாம அபி உலகம் என்றே புத்தக தலைப்பினை வைத்து கவிதை தொகுப்பு வெளியிடலாம். முத்திரை கவிதைகளாக, அபி உலகம்-...... அருமை.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கோபி ..))))
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அழகு... அருமை...

நன்றி...
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தோழர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்