அவளுக்கு என்னவென்று பெயர்

அவள்....
தூரிகை பழகலாம்...
நல்ல மாவறிந்து
பூரிக்கும் ரொட்டி சுடலாம்....
இயந்திரம் பொருத்தலாம்
திருத்தலாம்...

தங்கம் விலை பார்த்துப்
பொருமிப் புலம்பலாம் .....
அலங்கார பூஷிதையாய்
அபிநயம் பிடிக்கலாம் ..
தெருக்குழாயருகே
சண்டையில் கூந்தல் பறக்கலாம் ..
காதணி இழைந்தாட
கானம் படிக்கலாம்...
வரிசைகளில் மேலும் ஒருத்தியாய்
கால்கடுக்கலாம்...
நிலவிலும் நடக்கலாம்..

கழிப்பறை சென்று
பத்திரமாய்த் திரும்பி விட்டாளா ..?
பார்த்துவா..

கருத்துகள்

G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…

அவள்தானே பெண் எனும் புதிர்.! உங்கள்தவிப்பும் வலியும் புரிகிறது./க் கழிப்பறை சென்று பத்திரமாய் திரும்பி விட்டாளா.?/ கடவுளின் மறு பிரதி பலிப்பு, பெண் தெய்வம், பெண் எனும் பேய், என்று பலவகைகளில் உலா வரும் பெண்ணைப் பற்றி இவ்வளவு வாயதாகியும் எனக்குப் புரிதல் போதாது. ஆனால் அவள் ஒரு complex personality என்று மட்டும் தெரிகிறது. பல பதிவுகள் பெண்கள் பற்றி எழுதி இருக்கிறேன்.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நன்றிஅய்யா உங்கள் கருத்துரைக்கு.
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக முடித்துள்ளீர்கள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அளவிலா விளையாட்டுடையான்

பூ தைத்த சடை

அம்மாவும் கைபேசியும்