வியாழன், மே 02, 2013

வானம் வழங்கித்தான் பழக்கம்

இருள் விலகாப் புலரியில்
ஏதோ ஒரு கிணற்றடி
வேம்பிலமர்ந்து -கூவுவது
குயில் என
நான் அறியாக்காலம்வரை
அங்கே இருந்தது குயில்...

புலரியின் தேவதைக்கு
தங்க விசும்பு
தயாரிக்கச் சொல்லியிருக்கிறேன்
ஏனோ என் கிரீடம்
முனகிக் கொண்டே இருக்கிறது...
..
அட ... இந்த சிறகுத் தொப்பியை
கிரீடம் எனத்தான் சொல்வேன்...


போதும் ..
நான் ஒருபோதும் பார்த்திரா
வேம்புக் குயிலின் சிறகும்
இதில் இருக்கும்
என்றெல்லாம் வதந்தி பேசாதே..

.
புறப்படு .....
அந்தத் தங்க விசும்பை
அட்சய திருதியை அன்று
கொண்டுவந்துவிடு...!

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// அட ... இந்த சிறகுத் தொப்பியை
கிரீடம் எனத்தான் சொல்வேன்... ///

அருமை... வாழ்த்துக்கள்...

G.M Balasubramaniam சொன்னது…


சில நேரங்களில் abstract எண்ணங்களைப் புரிந்து கொள்வது சிரமமாயிருக்கிறது.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...