மலர்வது.... முள்ளா ?
ஆன்மாவின் சிறகுகளுக்கு
வண்ணம் பூசுவது
வழக்கம் இல்லைஎன்கிறாய் 


அம்புகளின் நுனியிலும்
மலரிணைத்தே விடுப்பவள் நான்..


துப்பும் நிறத்தையே
அடையாளமாக அணிந்திடும்
மொட்டுகளுக்கு
குழப்பம் தருவதே
உன் வழக்கமாகிவிட்டது...


உன்,என்,
வழக்கங்களை மீறியும்
சிரிக்கிறது பூ...
கூடவே அதன் முள்ளும்...

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
///கூடவே அதன் முள்ளும்... ///

அருமை...
G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…

/ கூடவே அதன் முள்ளும்/ மட்டுமல்ல என் விளங்காமையும். ஆன்மாவின் சிறகு, துப்பும் நிறம் வழக்கம் எல்லாம் எனக்குக் குழப்பமாகி விட்டது. மன்னிக்கவும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை