அவற்றைப்பேச விடாதீர்கள்

வண்ணத்துப் பூச்சி என்னென்ன
நிறங்களில் பறக்கிறது
ஆய்ந்து கொண்டிருந்தேன் ..
வண்ணத்துப் பூச்சி எங்கெல்லாம்
அமர்கிறது
என்ன வேகம் ..எத்தனை தூரம்...
கவனிப்பதே வேலையாய் இருந்தேன்
வண்ணத்துப்பூச்சியை
பிடித்துக் கொடுப்பவனை
நடுக்கத்துடன் பார்த்தவாறே
அட்டைப்பெட்டிக்குள்
இட்டு மூடியிருக்கிறேன்


பார்க்காத கலவைகளிலும்
அறியாத தீற்றல்களிலும் கூட
வண்ணத்துப் பூச்சியை
வரைய முடியும் என்னால்....
ஒருபோதும் சிறகு முளைக்காத
கூட்டுப் புழுவல்லவா  நீ
என நேற்றுப்  பார்த்த
வண்ணத்துப் பூச்சி ஏன்
கேட்டுத் தொலைத்தது ....

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வண்ணத்துப்பூச்சியின் என்ணத்தை (வலி) புரிகிறது...
கீத மஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
பறக்கும் வண்ணத்துப்பூச்சியின் வண்ணம் கணிக்க, அட்டைப்பெட்டிக்குள் பிடித்தடைக்கும் கூட்டுப்புழுவுக்கு வண்ணத்துப்பூச்சியாகும் வித்தை தெரியவில்லையா அல்லது தானும் ஒரு வண்ணத்துப்பூச்சியினம்தான் என்று அறியும் பக்குவமில்லையா? குடும்பமென்னும் கூட்டுக்குள் முடங்கிப்போன தாயும், சிறகொடித்து முடக்கப்பட்ட மகளும் முகம்காட்டிப்போகிறார்கள் கவிதையினூடே... மனமார்ந்த பாராட்டுகள் சக்தி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை