அவியாக் குவியல்

பொய்கள் இறைந்த முற்றத்தில் 
புழுங்கிய நெல் துழாவி விட 
இடம் தேடுகிறாள் வள்ளி 
ஒவ்வாமை சொல்லி 
குவிந்து கொள்கிறது 
அவிந்த நெல் 
எப்படியும் மூட்டை கட்டப் போவது 
தன்னையல்ல என்றறிந்த 
முற்றத்துப் பொய் 
காலாற ஒருகோடிக்கும் 
மறுகோடிக்கும் ....
ஊறவும் புழுங்கவும் காயவும்
இடியவும் 
இன்னொரு மூட்டை 
தயாராகிறது .....

கருத்துகள்

Rupan com இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்

சூப்பர்.... வாழ்த்துக்கள் அம்மா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் அருமை...

வாழ்த்துக்கள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் சொல்லாத தீபாவளி

அளவிலா விளையாட்டுடையான்

அம்மாவும் கைபேசியும்