ஞாயிறு, ஜூலை 13, 2014

என் தோழி

ஜூலை 7 அதீதம் இணைய இதழில் 

manjal
பட்டாம்பூச்சிகள் இங்கேதான்
சுற்றுகின்றன.
மஞ்சள் கறுப்பி ,ஆயிரம் குட்டி
போட்டிருப்பாள் போல…
அவளைக் கொண்டாடி
ஒரு நூறு கவிதை எழுதியிருப்பேன்…
அவளோடு நடப்பெல்லாம்
ஒரு தோழி போல் பகிர்ந்திருப்பேன் ..
நகைச்சுவைத் துணுக்குகளை
வாசித்துக்காட்டி சிரித்ததும் உண்டு …
எனக்குப் பிடித்த பாடலை
கள்ளக் குரலில்
பாடிக்காட்டி அபிப்பிராயமும்
கேட்டிருக்கிறேன்…
அவள் வலப்பக்க பூ தாவினால்
பிடிச்சிருக்கு…
இடப்பக்கமென்றால் சரியில்லை…
எல்லாமே கழிந்த நாட்களில் நிகழ்ந்தவை….
இப்போதுகூட
மகளின் மழலையர் வகுப்பு
வண்ணப்படமே நினைவுகளைக் கிளர்த்தியது..
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
ஆயுள் குறித்த அறிவியல் உண்மை
சொல்லாமல்
என் மஞ்சள் கறுப்பியைத் தேடித் தருவாயா
அவளை மறந்து
அனாதையாய் விட்டதற்காக மன்னிப்புக் கேட்கவேனும்…
**

2 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

அதீதம் இணைய இதழில் தங்களின் படைப்பு வெளிவந்தமைக்கு பாராட்டுக்கள் மேலும் தொடர்ந்து சாதனைபடைக்க எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...