தெப்பக்கட்டை

தெப்பம் சுற்றிவந்து கொண்டிருந்தது 
ஒரு பஞ்சுமிட்டாயோடு 
திருப்தி அடையாச் சிறுவர்களின் .,
பார்த்தே நிறைந்த கடைகளைப் 
பிரியப்போகும் சிறுமியரின்., 
வழமையான குழப்பங்களைத் துறந்த
நாட்கள் முடிகிறதே என
தீபாவளிச் சேலையால்
முகம் துடைத்தபடி நகரும் பெண்டுகளின்
மனமே
தன் தெப்பக்கட்டை
என பூச்சரம் ஆட ஆட
...............................................
தெப்பத்தில் அம்பிகையும்
சற்றே கண் கலங்கினாற்போலத்தான் .....

கருத்துகள்

ரூபன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்
அட...அட...சொல்ல வார்த்தைகள் இல்லை.. சொல்லியவிதம் கலக்கல் பகிர்வுக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை