தேர்தல் வருகிறது

சட்டகம் தயாராக இருக்கிறது
தகுந்த தலைகளை வரவேற்போம்
இன்றெனின்
தலைகளைத் தட்டி
தக வைப்போம்

**************************************
நாற்காலிகள் அழைக்கின்றன.
இருகாலிகளை நாற்காலிகளாகவே நடத்த
நாற்காலிகள் அழைக்கின்றன.
கும்பிடுகிறார் கூவுகிறார்
கும்பி நிறையா
குப்பன்களைப்பார்த்து
இன்றைய ருசிக்கு எதிர்கால அடுப்பை அடகு
வைத்திட்ட கூட்டத்தின் முன்
உதறுங்கள் பருக்கைகளை
இவரவர்க்கு இவையிவை
நீங்கள் அறியாததா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்