சிநேகிதி -யில்

பத்துகாசு பொட்டுக்கடலையோடு
பசியடக்கி
ஏதோ படித்து ஏதோ வளர்ந்து
வாக்கப்பட நின்னபோது
வரலட்சுமி நெனச்சதே இல்ல 
மூணு பவுன் போட முடியாம
சாராயக்கடை
முத்து மாமா வீட்டுக்கே
மருமகளாவோமுன்னு

மாமியார் வீட்டுல பொட்டுக்கடலைய
உடைச்ச கடலைன்னு சொல்றதையே
ஆச்சர்யமா சொல்லிகிட்டிருந்த
வரலட்சுமி
இப்போவெல்லாம் அலுப்பா சொல்றா
அஞ்சாவது கார் பத்தி
லட்ச ரூவா நாயப்பத்தி
நவரத்தின ஆரம் பத்தி
உடைச்ச கடலையும் பொட்டுக்கடலையும்
ஒண்ணுதான்னு சொல்லித்தந்த
கமலா ஆச்சர்யமாவே கேட்டுக்கிட்டுருக்கா
*************************************நன்றி.குமுதம் சிநேகிதி இதழ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அளவிலா விளையாட்டுடையான்

பூ தைத்த சடை

அம்மாவும் கைபேசியும்