கொஞ்சம் குரூரம் நிறைய வாழ்வு

இருப்பாய் என வந்தால்
போய்விட்டிருக்கிறாய்
சொல்லவேண்டி
எடுத்துவந்த சொற்கள்
வெம்பிக்கிடந்தன வெகுநாள் மனப்பையிலேயே
பேசிக்கொண்டிருப்பதாக
நினைத்துக் கொண்டு
குரல்கம்ம கசிந்துருகியபின்
காதில் விழுகிறது
இணைப்பு விடுபட்ட ஒலி
கம்மிய குரல் தீய்வதா
வேண்டாமாவெனத் திகைத்துப்போனது
எப்போதும் இப்படியே நிகழ்வதான
எதிரொலி வந்தால்
ஆறுதலாகும் தனித்துக்கிடக்கவில்லையென
கொஞ்சம் குரூரம்தான்
என்ன செய்ய


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை