ரௌத்திரத்தின் விலை

ரௌத்திரம் பழகவும்
தலைக்கொரு விலையுள்ள தேசமே 
தண்ணீர் நின்றாலென்ன
தரை வெடித்தாலென்ன
தவறாது 
டாஸ்மாக் செல்
சீரியல் பார்
குத்துப்பாட்டு கேள்
யாரையாவது நோக நோக மீம்ஸ்
போட்டுச்சிரி
பெண்ணின் படம் வரைந்து பாகங்களைக்குறி
உளறல் பகிர்ந்து பரவசமடை
தின்று எறியும் குப்பையுணவுக்குப்பைகளின் மேல் 

வளராதா என்ன
நாகரிகப்பயிர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை