ரீவைண்ட்

யாரோ சொன்னதையே 
எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பவர்க்கும்
யார் சொன்னதையும்
எப்போதும் கேளாதவர்க்கும்
இடையில் நின்று 
சொல்வது கேட்பதற்கான கோடழிந்த பெருவாழ்வு
வாழிய நிலனே

*****************************************
நினைவுகளை சேமித்துவைக்க
ஆன்திஸ் டே ஆப் இருக்கிறது
சுமந்தலையத் தேவையில்லை
மருகியதையும்
மறைத்ததையும் கூட
ஆதார் எண் கொண்டு அகழ்ந்தெடுத்து தருவார்கள்
பகிரங்கமாக்குவது குறித்து
பரிசீலிக்கும் வாய்ப்பு
இன்னும் உங்களிடமே இருப்பதே
பாக்யம்
இறுக்கமான முகத்தோடு
துக்கம், வருத்தம் சுமந்தபடியான
பாவங்களோடு
சிரித்தாலே இனிக்கும்

ரீவைண்ட்
ஓட்டிக்கொள்ளுங்கள் அதுவரை

*****************************************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை