ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

எச்சில் அமிர்தம்

 கைப்பற்றிக்கொள்ள எதுவுமே கிட்டாத ஒளிவெளியில் அலைபாயும் உள்ளங்கைக்குள் ஒரேயொரு ஆரஞ்சுமிட்டாயைப்

போட்டுவிட்டுப் போனான்

ஷப்பா
பாகு எச்சிலுக்குத்தான்
அமிர்தமென்ற பெயரா
தெரியவில்லை பாருங்கள் இத்தனைநாள் ****************************************************
நீள்சதுரமாக
சதுரமாக
உள்முக்கோணம்
வெளிமுக்கோணம்
வைத்து
பிசிறின்றி
தொங்காமல்
தொய்யாமல்
பொட்டலம் கட்டிவிடத் தெரிகிறதே என்று
எல்லாம் தெரியுதென நம்பிவிட வேண்டாம்
ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு கோணம்

************************************************

ஆறுதல்கள் சமதளப் புல்தரைபோல்
பசுமையாகத்தான் இருக்கின்றன
என் கோணத்திலா
பார்வையிலா
அது மலைச்சரிவுப் புல்தரைபோல்
இறங்கி... உருண்டு..
ஒட்டாது....
வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...