எலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 30, 2020

அன்பின் உண்டியல்

 இதுவரைக்கும் நடக்காததெல்லாம் நடக்கிறது இன்று விரிந்து பூத்திருக்க வேண்டிய அரை ரோஜாவை நேற்றிரவு ஏதோ கடித்துவிட்டது அணிலா எலியா என்ற வாதம் எங்களுக்குள்


*******************************************

மறந்துபோன மனிதர்களெல்லாம் அழைக்கிறார்கள்
பத்திரமாயிருக்கச்சொல்லி
குறுஞ்செய்தியாவது
அனுப்புகிறார்கள்
ஒரு தும்மல் வரும்வரை
கிடைக்கும் அன்பையெல்லாம் சேர்த்துவைக்கும் உண்டியல் இருக்கிறதுதானே

திங்கள், மே 13, 2019

எலிஎனச் சொல்வது எலியை அல்ல


நேரம் தவறிப்போய்
இரைதேட ஒரு பூனை
எதிர்ப்படுமென எதிர்பாரா எலிகள் 
எதையோ எதிர்பார்த்து
வளைக்குக் குறுக்குவழியை
அறிந்து வைத்துக் கொள்கின்றன.
**************************************************
விட்டம் அறியாது தலையை
விட்டுக்கொள்ள
ஓர் பால்செம்பு கூட இல்லாத
உங்கள் சமையலறையைச் சீண்டாது தாவுது பூனை
எரிச்சலைக்காட்ட டப்பர்வேரைச் சுரண்டிவிட்டாவது
ஓடுகிறது எலி
**************************************************
மீசையும் கண்களுமே உங்களை அச்சுறுத்தப் போதுமென்ற
நினைவோடு
கூரான நகங்களை ஓரப்பார்வையால்
பார்த்துக் கொண்டு நிற்கும்
பூனையை விரட்ட
ச்சூ என்ற ஒற்றைக்குரல் போதுமாயிருக்கிறது.
உங்களை நேருக்குநேர்
சந்திக்காது ஓடும் எலிகளிடம் தான்
ஏதேதோ செய்தும் தோற்றுப் போகிறீர்கள்
*******************************************************
விஸ்வரூபக் கற்பனைகளில்
வாலைநீட்டியோ ஆட்டியோ நகரும்
பிறவிகொண்ட பூனை
எலிக்கறிக்காக உங்களோடு போட்டி கூட
போடும்
நீங்களும் ஒரு மியாவ் எழுப்பி உறவாகலாம்
என்ன செய்வீர் எலியிடம்
எலிவழி தனிவழி
டிஸ்கி#இது அரசியல் கவிதையாகவும் இருக்கலாம்.

செவ்வாய், அக்டோபர் 23, 2018

திருவாளர் பொதுஜனம்



எலி ஓடுகிறது என்று தெரியும்தானென்றாலும்
உருளும் சப்தம் கேட்கையிலெல்லாம்
 தூக்கிவாரித்தான் போடுகிறது.
புத்தம்புது பயம்

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை
என்ன சொல்கிறார்கள் என்று
வாய்பிளந்து கவனிக்கும்
புத்தம்புது ஆச்சர்யம்போலவே
காமதேனு செப்டம்பர் 16

புதன், மார்ச் 30, 2016

புறப்படு

சரி வந்தாயிற்று
சற்றே இளைப்பாறலாம்
இந்த நிலா நினைக்காததை
அந்த கதிர் நினைக்காததை 
தக்காளித்துண்டில் தடவப்பட்ட
விஷப்பசையைத்தின்ற எலி கூட
நினைக்காததை
நீ ஏன்..
விண்வெளிஓடம் எனப்படித்ததற்காக
துடுப்பெல்லாம் வேண்டாம்
புறப்படுதல் மட்டுமே
உனது கடன்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...